திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
பரமத்தி ஒன்றியம் திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பரமத்தி வேலூர், நவ.4: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம் திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் வசந்தபுரம் அருகே உள்ள நடந்தை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் பி.பி. தனராசு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அன்பழகன், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், பரமத்தி பேரூர் செயலாளர் ரமேஷ் பாபு, வழக்கறிஞர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தலில் வாக்கு சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், 2026 ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என 72 வாக்கு சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றியம், நகரம், பேரூர், கிளை கழக, இளைஞர் அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.