திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
கபிலர்மலை ஒருங்கிணைந்த ஒன்றியம் திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பரமத்தி வேலூர், நவ.5: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கபிலர்மலை ஒருங்கிணைந்த திமுக ஒன்றிய வடக்கு,தெற்கு, மேற்கு செயலாளர்கள் சரவணகுமார், தளபதி சுப்பிரமணி, சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தலில் வாக்கு சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், 2026 ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றியம், நகரம், பேரூர், கிளை கழக, இளைஞர் அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.