தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசு மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய எம்.பி கே.ஆர்.அண்ட் ராஜேஷ்குமார்.

நாமக்கல் மாவட்டத்தில் 10,061 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.;

Update: 2025-11-14 11:11 GMT

நாமக்கல் மாநகராட்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம்  மற்றும்  மேயர்து.கலாநிதி  ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் 339 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.16.36 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / மாவட்ட மத்தியக் கூட்டுறவுவங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, அரசு பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் இட ஓதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொடர்நது பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். கல்வி செல்வம் ஒன்றே ஒருவரின் வாழ்க்கை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாணவர்களுக்கு ரூ.1,000/- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார்கள்.இன்றைய தினம் இப்பள்ளியில் 11- ஆம் வகுப்பு பயிலும் 339 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.16.36 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. மிதிவண்டிகள் பெறும் மாணவ, மாணவியர்கள் பாதுகாப்பாக பயணம் செய்திட வேண்டும். இது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று சமூகத்தில் நல்ல நிலையை அடைந்திட வேண்டும். மேலும், அனைவருக்கும் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டத்தில் 2025-2026ம் கல்வியாண்டில் 103 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 4,724 மாணவர்கள், 5,337 மாணவியர்கள் என மொத்தம் 10,061 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் துணை மேயர்செ.பூபதி, முதன்மை கல்வி அலுவலர்  ஆ.சு.எழிலரசி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ம.கிருஷ்ணவேணி, மாவட்ட கல்வி அலுவலர்கே.எஸ்.புருஷோத்தமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


                                                  

       

    

                                                                                                                                

                                                          

                    

                                

      

Similar News