தீய பழக்கங்கள் இல்லாமல், நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மோகனூர் வட்டம், வளையப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து, மாணவ, மாணவியர்களுக்கு உணவு வழங்கினார்.;

Update: 2025-11-14 11:24 GMT

நாமக்கல் மாவட்டஆட்சியர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் நாளை சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடிய மனிதர்களாக விளங்கும் வகையில் பள்ளி படிப்பை மேற்கொள்ள வேண்டும். தீய பழக்கங்கள் இல்லாமல் பெற்றோர்களை மதித்து, சமுதாயத்தில் சிறந்த உழைப்பாளர்களாக. தொழில் முனைவோர்களாக திகழ வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் போதை இல்லா தமிழ்நாடு உருவாக பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. போதை பழக்கங்கள் இல்லாமலும், கைபேசி தொடர்ந்து பயன்படுத்துவதை தவிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு நல் ஒழுக்கங்களை கற்பிக்க வேண்டும். குழந்தைகள் தினமான இன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, குழந்தைகளுக்கு முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி, உணவு பரிமாறி மகிழ்ந்தார்.இவ்விழாவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Similar News