வேளாண்மைத்துறையின் பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறையின் சார்பில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
நாமக்கல் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு சிறப்பு மற்றும் ரபி பருவங்களில் நெல், சிறிய வெங்காயம், சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் தக்காளி ஆகிய பயிர்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (PMFBY) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.இத்திட்டம் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரச்சார வாகனங்களை பயன்படுத்தி, பயிர் காப்பீட்டுத் திட்ட விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை /ஏக்கர் மற்றும் காப்பீடு செய்ய கடைசி தேதிகள் முறையே பாசிப்பயறு, உளுந்து ஆகிய பயிர்களுக்கு ரூ.195, ரூ.252 -15.11.2025, சோளம், மக்காச்சோளம் பயிர்களுக்கு ரூ.124 ரூ.482 - 30.11.2025, சிறிய வெங்காயத்திற்கு ரூ.2088 - 01.12.2025, நெற்பயிருக்கு ரூ.568 - 16.12.2025, நிலக்கடலைக்கு ரூ.327 - 30.12.2025, தக்காளிக்கு ரூ.1841 - 31.01.2026, வாழை, மரவள்ளி பயிர்களுக்கு ரூ.1895 ரூ.524 - 28.02.2026, பருத்திக்கு ரூ.377 - 17.03.2026 மற்றும் கரும்பிற்கு ரூ. 1289 - 31.03.2026 ஆகும்.மேலும், விவசாயிகள் கட்டணத் தொகையை செலுத்தி காப்பீடு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை அணுகுமாறு விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கா.இராமச்சந்திரன் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.