பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ். மாதேஸ்வரன் மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில் 2025-26 ஆண்டிற்க்கு கரும்பு அரவையினை தொடங்கி வைத்தார்;
2025-2026 கரும்பு அரவை மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025-26-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவம் துவக்கி வைக்கப்பட்டது. நடப்பு அரவைப் பருவத்திற்கு 2210 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பதிவு பரப்பிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 36.20 டன்கள் சராசரி விளைச்சல் மதிப்பீடாக கணக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 80000 டன்கள் பதிவு கரும்பும், கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவில்லாக் கரும்புகளை நேரடி பதிவு மூலம் பதிவு செய்தும் 2025-26 அரவைப் பருவத்தில் மொத்தம் 90000 டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2024-25 கரும்பு நடவு பருவத்தில் அதிக மகசூல் மற்றும் சர்க்கரை 5 Co.86032, Co.11015, Co.C.13339, Co.V.09356 Co.18009 ரக கரும்புகளை கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் வகையில் 4% அடி பார் முறையில் நடவு செய்து அதிக மகசூல் பெறவும் தமிழக அரசின் மானிய திட்டங்கள் மூலம் ஆலையும் அங்கத்தினர்களுக்கு மானிய தொகையாக ரூ.23.60 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2024-25-ம் ஆண்டு 1004 அங்கத்தினர்களுக்கு 73,000 டன்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349/- வீதம் ரூ.2.56 கோடி விடுவிக்கப்பட்டு, கரும்பு நிலுவைத் தொகையாக ரூ.23.47 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனால் உற்பத்தி ஆலை மேம்பாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இந்நிகழ்வில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் / மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, சர்க்கரை ஆலை சார்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.