கரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
கரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.;
கரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி நவம்பர் 18ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட தலைநகரங்களில் தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மோகன்ராஜ் மாவட்ட இணை செயலாளர் குணசுந்தரி மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியை மீள வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். நீதிமன்ற பயிற்சி வழங்கிட வேண்டும். புதிய நகர சார் ஆய்வாளர்களின் பணி இடங்களை வழங்கிட வேண்டும். SCRC க்கு ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர்களின் பணியிடங்களை மீள மீண்டும் வழங்கிடவும் மற்றும் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.