பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அமைப்பு தொடக்க விழா‚

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் தேசிய மாணவர் படை அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.;

Update: 2025-11-20 12:58 GMT

பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர்மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்  நிகழ்ச்சியில் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக சேலம் தேசிய மாணவர் படை இராணுவப் பிரிவின் படைக்குழு ஆணையாளர் கர்னல்.சூரஜ்எஸ் நாயர் மற்றும் தேசிய மாணவர் படை மூத்த ஜே.சி.ஓ. அதிகாரி ரிசால்டர் ரதீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் ஆங்கிலத் துறை ஆசிரியர் திருமதி.அஞ்சு ராணி வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் அவர்கள் குத்தவிளக்கேற்றி விழாவினைச்சிறப்பித்தார்.சிறப்பு விருந்தினர் கர்னல்.சூரஜ் எஸ் நாயர் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தம்உரையில் ‘இன்றைய மாணவர்களைரூபவ் நாளைய தலைவர்களாக உருவாக்கும் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் தேசிய மாணவர்படை தொடங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கச் செயலாகும். ஏனென்றால் இந்த என்.சி.சி அமைப்பானது மாணவமாணவிகளின் ஒழுக்கம்ரூபவ் தேசபக்திரூபவ் செயல்களில் நேர்த்தி போன்ற பண்புகளை மெருகேற்றி தேசத்தின்தலைவர்களாகவும்ரூபவ் இராணுவ வீரர்களாகவும் உருவாக்குகிறது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவரூபவ் மாணவிகளாகியஉங்களுக்கு இந்த என்.சி.சி அமைப்பின் மூலம் நற்பண்புகளையும்ரூபவ் நல் சிந்தனைகளையும் விதைத்துரூபவ் சமூகஅக்கறையினையும்ரூபவ் தேசப்பற்றினையும் விதைப்பதன் மூலமாக நாளைய சமூகம் சிறப்பானதாக அமையும். நீங்கள்உங்கள் பள்ளிக் கல்வியை முடித்த பின்புரூபவ் 18 வயது முதல் 23 வயது வரை உள்ள 5 ஆண்டு காலங்கள் கவனமுடன்செயல்பட்டுரூபவ் உங்களின் தொழில் முன்னேற்றப் பாதையை சிறப்பாக அமைத்துக் கொண்டால் அடுத்த 50 வருடங்கள்உங்களால் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். தேசிய மாணவர் படை மாணவ மாணவிகளாகிய நீங்கள் பின்வரும்நான்கு விஷயங்களை பின்பற்ற வேண்டும். முதலாவது உங்களின் மொழித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.குறைந்தது 5 அல்லது 6 மொழிகளையாவது நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அது உங்களின் தன்னம்பிக்கையைவளர்க்கும். இரண்டாவது நன்கு புத்தங்களைப் படிப்பவர்களாகத் திகழ வேண்டும். அது உங்களை அறிவில் வல்லவர்களாகஉருவாக்கிரூபவ் மொழி வல்லமையையும் கொடுக்கும். மேலும் புத்தங்கள் உங்கள் வாழ்வின் பல்வேறு கட்டங்களில்உங்களோடு இணைந்து பயணிக்கும். மூன்றாவது கற்கும் கல்வியைப் பிழையறக் கற்றுரூபவ் உங்களை நீங்களேநெறிப்படுத்திக் கொண்டு உங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா அனைத்து திறன்களையும் வெகுவாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நிறைவாக உங்களின் பெற்றொர்ரூபவ் கடவுள் மற்றும் ஆசிரியர் ஆகியோரை உங்கள்கடவுள்களாக மதித்து நன்றியறிதலுள்ளவர்களாகத் திகழுங்கள். இவைகளை உங்கள் வாழ்வில் பின்பற்றிரூபவ் தேசியமாணவர் படைத் திட்டத்தின் மூலமாக உங்களை நீங்களே தகவமைத்துக் கொண்டு தேசத்தின் வளர்ச்சியில் நீங்கள்பங்களிக்கரூபவ் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று பேசினார்.முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.தொடர்ந்து பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் தேசிய மாணவர் படை மாணவரூபவ் மாணவிகள் அனைவரும் உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர். பின்னர் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய மாணவர் படை பாடலை பாடினர்.நிறைவாக ஆங்கிலத்துறை ஆசிரியர் ரிஜி நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதேநிறைவடைந்தது.நிகழ்ச்சியில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் ரோஹித்ரூபவ் ஆசிரியர்கள்ரூபவ் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News