நாமக்கல் தெற்கு நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்!
நாமக்கல் தெற்கு நகரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்கா சாலை அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் இனிப்புடன் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.;
நாமக்கல் தெற்கு நகர தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் தெற்கு நகரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்கா சாலை அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் இனிப்புடன் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 26 வது வார்டு செயலாளர் பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர் சகுந்தலா கருணாகரன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கடல் அரசன் கார்த்தி, தெற்கு நகர இளைஞரணி எம்.எஸ் ராஜேஷ், ஐடி விங் கோட்டை கெளதம், எம். எஸ். ஆர்.மன்னன், பவித்திரன், தெற்கு நகர நாமக்கல் திமுக மாணவர் அணி ஸ்ரீராம், முகமது இலியாஸ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்