உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாமக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய துணை மேயர்!
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நாமக்கல் கிழக்கு நகர திமுக செயலாளரும், துணை மேயர் பூபதி வழங்கினார்.;
நாமக்கல்லில், தமிழக துணை முதல்வர்/ திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் திமுக கிழக்கு நகர செயலாளர் துணை மேயர் செ.பூபதி தலைமையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், மதிய உணவு வழங்கப்பட்டன. நாமக்கல்- சேலம் சாலை எல்எம்ஆர் தியேட்டர் பின்புறம் உள்ள திமுக கிழக்கு நகர செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் திமுக கிழக்கு நகர செயலாளரும், மாநகராட்சி துணை மேயர் செ.பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில் நாமக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் டீ.டீ. சரவணன், சுரேஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.