நாமக்கல் மாநகராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு! எம்பி., எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து!

நாமக்கல் மாநகராட்சி நியமன கவுன்சிலராக, கிழக்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் மணிமாறன் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் பதவியேற்று கொண்டார்.;

Update: 2025-11-28 14:48 GMT
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மாநகராட்சியில் மாற்றுத்திறனாளியான ஒருவருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் நாமக்கல் மாநகராட்சியில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளியான மணிமாறன் நியமிக்கப்பட்டார்.நாமக்கல் மாநகராட்சி நியமன கவுன்சிலராக, கிழக்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் மணிமாறன் அறிவிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் அவர் பதவியேற்று கொண்டார். மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட மணிமாறன் அவர்களுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் நியமன ஆணையை வழங்கி, அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
நாமக்கல் மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பிரதான சாலை சேர்ந்த மணிமாறன் என்பவரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் நியமனம் செய்துள்ளார். இதை எடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் புதிய நியமன உறுப்பினராக உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி நியமன உறுப்பினர் ஆணையை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.
தொடர்ந்து நியமன உறுப்பினருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து நியமன குழு உறுப்பினர் இருக்கையில் அவரை அனைவரும் அமர வைத்தனர். தொடர்ந்து அனைத்து கட்சியினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசிய நயமான உறுப்பினர் மணிமாறன், தன்னை நியமனம் செய்த தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் துறை சார்ந்த அமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பங்கெடுக்க வாய்ப்புகளை அளித்துள்ளது எங்களைப் போன்றவர்களுக்கு பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் மக்கள் பணியை தொடர்ந்து நல்ல முறையில் செய்ய முடியும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றி பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் எம்பி.,
தமிழ்நாடு அரசின் சிறப்பு ஆணை காரணமாக முதல்வரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாக்கப்பட்டு மணிமாறன் மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாய்ப்பு அளித்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் மாவட்ட திமுக அவை தலைவராக உள்ளார். உயர்ந்த பொறுப்பில் உள்ள அவர் இன்று மாவட்ட உறுப்பினராக பெருமை சேர்த்துள்ளார். அவரது அனுபவங்களை இந்த மாவட்டத்தில் பகிர்ந்து கொண்டு மாநகராட்சிக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி மக்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாக இருப்பார். மக்கள் நலன் ஒன்றையே பிரதானமாக செயல்படவும் நல்ல உறுப்பினர் கிடைத்துள்ளார்.திமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல் நகராட்சி மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றி தருவார் இவ்வாறு அவர் பேசினார்‌. இந்த நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் து. கலாநிதி, துணை மேயர் செ. பூபதி, ஆணையாளர் க. சிவகுமார், மாமன்ற உறுப்பினர்கள், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News