உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்: கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்!

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து நலத்திட்ட உதவிகளை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.;

Update: 2025-11-28 16:03 GMT
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சிக்காரர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு எத்தனை குழந்தைகள் பிறக்கிறதோ அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து (நவம்பர் 27 வியாழக்கிழமை) பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து நலத்திட்ட உதவிகளை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
நிகழச்சியில் மாவட்ட அவைதலைவர் சி.மணிமாறன்,மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி,நகர கழக செயலாளர்கள் செ.பூபதி(துணை மேயர்),ராணா ஆனந்த்,சிவக்குமார்,ஒன்றிய கழக செயலாளர்கள் பழனிவேல், நவலடி, துரைசாமி, கௌதம்,ஜெயபிரகாஷ்,பேரூர் கழக செயலாளர் செல்லவேல்,மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தகுமார்,மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, சார்பு அணி நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News