தொட்டிவாடி கன்னிமூல கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தொட்டிவாடி கன்னிமூல கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;

Update: 2025-12-01 11:36 GMT
தொட்டிவாடி கன்னிமூல கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பி. அணைப்பாளையம் கிராமத்தில் உள்ள நிமிந்தபட்டி அருகே தொட்டிவாடி பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு கன்னிமூல கணபதி அருள்மிகு பத்திரகாளி அம்மன் அருள்மிகு மகாமுனி குன்னிமரத்தான் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பல்வேறு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மங்கல இசையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பல்வேறு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை பரிவட்டம் கட்டிய கோவில் நிர்வாகிகளும் சிவாச்சாரியார்களும் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்சென்று பூஜை மற்றும் ஆராதனைகள் செய்தனர். பின்னர் புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

Similar News