உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர்
உலக மாற்றுத் திறனாளிகள் தினம்;
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனியில் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, செல்போன் உள்ளிட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உட்கருணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 43 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, மற்றும் செல்போன் உள்ளிட்ட 6 லட்சத்தி 31 ஆயிரத்து 674 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பயனாளிகளுக்கு வழங்கினார் மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நடைபெற்ற விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார் முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் இருக்கின்றது, வாய்ப்புகளை பயன்படுத்தி அதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்