மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை

தடை;

Update: 2025-12-03 08:12 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளிகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த வந்த தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கும்பக்கரை அருவியில் நேற்று காலை நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்த நிலையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் அருவி பகுதியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்

Similar News