திமுக நிர்வாகியின் வீட்டில் அமலாக்கத்துறை, வருமான வரி, மற்றும் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக தொடரும் சோதனை
அமலாக்கத்துறை;
போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நேற்று வீட்டிற்கு வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறையினர், வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் வீட்டு சிறையில் வைத்து தற்போது வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கரின் வீடு, ஏலக்காய் குடோன், கேரளா இடுக்கி மாவட்டம் கடுக்கான் சிட்டியில் உள்ள கடை மற்றும் அலுவலகத்தில் சுழற்சி முறையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி இவருடைய கணவர் சங்கர் திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும் போடி 29 வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர் தமிழக - கேரள பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து வெளிமாநிலங்களுக்கு வர்த்தகம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏலக்காய் வர்த்தகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் வருமான வரித்துறையினர், ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறையினர் சங்கருக்கு சொந்தமான வீடு, ஏலக்காய் வர்த்தக குடோன், கேரளா இடுக்கி மாவட்டம் கடுக்கன் சிட்டியில் உள்ள கடை மற்றும் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சோதனை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றது வருகிறது சங்கர் அவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி நேற்று அவரது வீட்டிற்கு வருகை தந்தையின் ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரை வீட்டு சிறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சங்கர் மற்றும் அவருடைய மகன் லோகேஷ் தலைமறைவாக்கி உள்ள நிலையில் சங்கரின் மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் ஏலக்காய் வர்த்தகத்தில் சங்கருக்கு தொடர்புடைய நபர்கள் மற்றும் வியாபாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது சங்கரின் வீடு அலுவலகம் ஆகிய பகுதிகளில் சுழற்சி முறையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் போடி பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது