மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் டிரினிடி கல்லுரி மாணவி இரண்டம் இடம் பிடித்து சாதனை.
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையானது மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியினை அண்மையில் நடத்தியது.;
இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி ஏ. ஷாலினி, 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார்' என்ற தலைப்பில் பேசி 2-ஆம் பரிசு பெற்று ரூ. 3000/க்கான காசோலையினையும், பாராட்டுச் சான்றிதழையும் 09/12/2025 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஆர். பிரகாஷ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.இதன் தொடர்ச்சியாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், துறைத்தலைவர்கள் ஆர். நவமணி, டி. கே. அனுராதா, பொறுப்பாசிரியை வீ. அபிராமி ஆகியோர் ஏ. ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.