நவோதயா பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே - சிலம்பம் - யோகா ஆகிய மும்முனைப் போட்டிகளில் நவோதயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை வெற்றி பெற்றுள்ளனர்.;
லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான கரேத்தே – சிலம்பம் - யோகா ஆகிய மும்முனைப் போட்டிகளை கடந்த 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பேராலம் மணிமோகன் மஹாலில் நடத்தியது. அதில் நவோதயா பள்ளி மாணவர்கள் எம். பி. தருண் ராம் (ஒன்பதாம் வகுப்பு) செல்வன் எஸ்.பி . மித்தேஷ் (ஒன்பதாம் வகுப்பு) இருவரும் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு. முதலிடத்தைப்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் தேனருவி அனைவருக்கும் மெடல் அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில் “கராத்தே, சிலம்பம், யோக மூன்று கலையும் தமிழரின் பாரம்பரியமான கலைகள் உடல் ஆரோக்கியத்திற்கு உன்னதமான கலைகள். தன்னம்பிக்கையை வளர்க்கும் கலை இந்த மாணவர்கள் இந்த மூன்று கலைகளில் சிறந்து விளங்குவது பாரட்டக்கூடியது. எதிர் காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகளைக் கூறினார்மேலும் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பணியாளர்கள், சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் வெற்றியாளர்களை வாழ்த்தி பாராட்டினர்கள்.