வெள்ளகோவிலில் சிக்னல் வேலை செய்யாமல் போக்குவரத்து இடையூறு வீடியோ வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மாடு உள்ள கோவில் கடைவீதி பகுதியில் சிக்னல் செயல்படாததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகனங்கள் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது;
வெள்ளகோவில் கடைவீதி திருச்சி - கோயமுத்தூர் பிரிவில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்காத காரணத்தால் வாகனங்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் செல்கின்றது.அதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இது குறித்து போக்குவரத்து காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழந்துள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோவை வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.