திராவிடப் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் செட்டிக்குளம் ஊராட்சியில் நடைபெற்றது.

கபடி போட்டிகளில் ஆண்கள் 16‌ அணியும், பெண்கள் 3 அணியும் என மொத்தம் 19 அணிகளைச்சேர்ந்த வீரர்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டு களத்தில் விளையாடினார்கள். ஆண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற தெரணி கபடி குழுவிற்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்,;

Update: 2026-01-11 16:22 GMT
பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் கிழக்கு மேற்கு ஒன்றியங்கள் சார்பில் திராவிடப் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் செட்டிக்குளம் ஊராட்சியில் நடைபெற்றது! வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு பணமுடிப்பு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார்கள்! ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி - டாக்டர் செ.வல்லபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் கிழக்கு மேற்கு ஒன்றியங்கள் சார்பில் திராவிடப் பொங்கல் கபடி விளையாட்டு போட்டிகள் செட்டிக்குளம் ஊராட்சியில் நடைபெற்றது. ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் - ஆலத்தூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி‌ தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் முன்னிலையில் நடைபெற்ற கபடி போட்டிகளில் ஆண்கள் 16‌ அணியும், பெண்கள் 3 அணியும் என மொத்தம் 19 அணிகளைச்சேர்ந்த வீரர்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டு களத்தில் விளையாடினார்கள். ஆண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற தெரணி கபடி குழுவிற்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக இரூர் கபடி குழுவிற்கு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக நக்கசேலம் கபடி குழுவிற்கு ரூ.5 ஆயிரம், நான்காம் பரிசாக கூத்தூர் கபடி குழுவிற்கு ரூ.2 ஆயிரம் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் சுழற்கோப்பை மற்றும் பெண்கள் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற தேனூர் கபடி குழுவிற்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்ற செட்டிக்குளம் கபடி குழுவிற்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற தேனுர் கபடி குழுவிற்கு ரூ.2 ஆயிரம் பணமுடிப்பு மற்றும் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் சுழற்கோப்பை ஆகியவற்றை மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி, வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தினார்கள். ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெ.கார்மேகம், துணை அமைப்பாளர்கள் மனோகர்,வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி சந்திரமோகன், கிளைச் செயலாளர் மாணிக்கம், துரை கந்தசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரோகிலன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News