கரூரில், தள்ளாத வயதில் தங்களது சொத்தை அபகரிக்க முயலும் மகள் மற்றும் மருமகன். மாற்றுத்திறனாளி கணவருடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மூதாட்டி.

கரூரில், தள்ளாத வயதில் தங்களது சொத்தை அபகரிக்க முயலும் மகள் மற்றும் மருமகன். மாற்றுத்திறனாளி கணவருடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மூதாட்டி.;

Update: 2026-01-12 11:09 GMT
கரூரில், தள்ளாத வயதில் தங்களது சொத்தை அபகரிக்க முயலும் மகள் மற்றும் மருமகன். மாற்றுத்திறனாளி கணவருடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மூதாட்டி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமானுஜம்-ஜெயா தம்பதிகள். இவர்களுக்கு புனிதா, கோகிலா என்ற இரு மகள்களும் விஜயன் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் மகன் விஜயன் ஒரு விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது மனைவியின் பராமரிப்பில் உள்ளார். மகள் கோகிலா திருமணம் செய்த பிறகு மனநல பாதிப்பு ஏற்பட்டதால் கணவரின் துணை இன்றி ராமானுஜம்- ஜெயா தம்பதிகளின் பராமரிப்பில் உள்ளனர். மூத்த மகள் புனிதா மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் ஆகியோர் கரூர் அடுத்த புகலூர் அன்னை நகர் பகுதியில் ராமானுஜத்திற்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது வயதான காலத்தில் முதியவர்கள் ஆன ராமானுஜம் மற்றும் ஜெயா ஆகியோரை பராமரிப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது காலம் முடிந்த பிறகு அந்த வீட்டை அனுபவித்துக் கொள்ள கடந்த 2012 ஆம் ஆண்டு புனிதாவிற்கு உயில் எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் முதியவர்களுக்கு அவர்கள் எவ்வித பராமரிப்பும் செய்யாததோடு வீட்டின் கிரைய பத்திரத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு மகளும் மருமகனும் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர். தற்போது ராமானுஜம் மாற்றுத்திறனாளியாக உள்ளார். இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் இன்று மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க இருவரும் வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஜெயா செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, மனநலம் பாதித்த மகள் மற்றும் அவரது மகள் மோனிகா, உடல் நலம் பாதிக்கப்பட்ட மகன் விஜயன் ஆகியோரை வைத்துக்கொண்டு வயதான காலத்தில் வருவாய் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இந்த சூழலில் தங்களை வீட்டை விட்டு விரட்டியதால் வேறு வழி இன்றி தவிப்பதால் எழுதி வைத்த உயிலை ரத்து செய்து விட்டனர். தற்போது தனது மகளும் மருமகனும் இணைந்து தங்களை வீட்டை விட்டு விரட்டி உள்ளதால் தங்களது வீட்டை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

Similar News