அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2026-01-13 13:44 GMT
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் 267 லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. லெனின், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய கண்ணன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேஷ் பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, அதன் முக்கியத்துவம் மடிக்கணினிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். இதில் பேராசிரியர்கள் ரகுபதி, ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News