கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா - விவேகானந்தர் பிறந்தநாள் விழா

கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா - விவேகானந்தர் பிறந்தநாள் விழா;

Update: 2026-01-13 15:28 GMT
ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா, விவேகானந்தர் பிறந்த தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவர் க.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக விவேகானந்தர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு, அவரசு சொற்பொழிவுகள், பொன்மொழி்கள் குறித்தும் மாணவ மாணவியர்களுக்கு க.சிதம்பரம் விளக்கிக்கூறினார். இதே போல் மாணவ மாணவியர்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடையணிந்து, பொங்கல் வைத்துக் கொண்டாடினர். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், தனித்திறமை, கோலப் போட்டி, பானை உடைத்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் க.சிதம்பரம், செயலாளர் செ.பரிமளா, முதல்வர் ப.அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று பொங்கல் தினப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Similar News