விட்டுக்கட்டியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு

பல லட்சக்கணக்கான லிட்டர் காவேரி குடிநீர் வீணாக வெளியேறியது;

Update: 2026-01-13 17:30 GMT
கரூர் மாவட்டம், காவேரி ஆற்றில் இருந்து வீட்டுக்கட்டி,மகிளிப்பட்டி, தரகம்பட்டி வழியாக மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு மதுரை மாவட்டம் மேலூருக்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்காக வீட்டுக்கட்டி பாலம் வழியாக செல்லும் காவிரி கூட்டு குழாயில் உள்ள ஏர் வாழ்வு திறக்கப்பட்டு அதன் வழியாக குடிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் குழாயில் இருந்து சுமார் 10 அடி தூரத்திற்கு அருவிகளில் நீர் கொட்டுவது போல் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் பல லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது. இந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருவது வாடிக்கையாகவே உள்ளது. எனவே குடிநீரை வீணாக்காமல் இருக்க குழாய்களில் உடைப்பு ஏற்படாத வண்ணம் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News