சேந்தமங்கலத்தில் திமுக நிா்வாகிகளின் வாரிசுகளுக்கு உயர் கல்வி படிக்க உதவித்தொகை!
திமுக நிர்வாகிகள் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 160 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமாா் எம்பி வழங்கினார்.;
நாமக்கல் மாவட்ட திமுக உறுப்பினா் குடும்பத்தினரை சோ்ந்த மாணவ மாணவியா்களுக்கு உயா் கல்வி பயில உதவித்தொகை வழங்கும் விழா சேந்தமங்கலம் சௌபாக்கியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வழிகாட்டுதல் பேரில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் குடும்பத்தில் பயிலும் மாணவ மாணவியா்களுக்கு கலைஞா் நினைவு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து,சேந்தமங்கலம் ஒன்றியம் (104 பேர்), சேந்தமங்கலம் பேரூர் (34 பேர்) மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பேரூர் (22 பேர்) கிளை மற்றும் வார்டு கழகத்தில் தற்போது பொறுப்பில் உள்ள அவைத் தலைவர். துணை செயலாளர், பொருளாளர் மற்றும் ஒன்றிய/பேரூர் அணியின் அமைப்பாளர் / துணை அமைப்பாளர் / தலைவர் மற்றும் தொடர்ந்து கழகத்தில் இரண்டு உறுப்பினர் அட்டைக்கு குறையாமல் உள்ளவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 160 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நிதியுதவியை மாணவ மாணவியா்களுக்கு வழங்கிப் பேசினாா்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் அ.அசோக்குமார், தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய தலைவர் கனிமொழி,பேரூர் கழக செயலாளர்கள் தனபாலன், முருகேசன், சார்பு அணி அமைப்பாளர்கள் சாம்சம்பத், ஆனந்தகுமார், பொன்.சித்தார்த், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.