ராசிபுரம் அதிமுக 6.வது வார்டு கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்...

ராசிபுரம் அதிமுக 6.வது வார்டு கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்...;

Update: 2026-01-17 16:13 GMT
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109.வது பிறந்தநாளை கழக நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆறாவது (6.வது.) வார்டு பகுதியில் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மாவட்ட பிரதிநிதி முன்னாள் கவுன்சிலர் ஆர்.பி. சீனிவாசன், தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் அதிமுக நகர கழக செயலாளர் எம். பாலசுப்ரமணியன், மற்றும் சிறப்பு விருந்தினராக முனைவர் பெ. தங்கராசு பெரியசாமி, ஜியாலஜிஸ்ட் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களின் 109.வது பிறந்தநாளை மாலை அணிவித்து மலர் தூவி உற்சாகமாக நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆர்.பி. சீனிவாசன், மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சிவா ஆகியோர் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் , சர்க்கரைப் பொங்கல், தக்காளி சாதம், தயிர் சாதம், உள்ளிட்டவை வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, நகர அவைத் தலைவர் கோபால், முன்னாள் கவுன்சிலர்கள் அருணாச்சலம், சுந்தரம், வாசுதேவன், ஸ்ரீதர், மகளிர் அணி ஹேமலதா, மற்றும் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News