ஆர்.டி மலையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த எம் எல் ஏ செந்தில் பாலாஜி

சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளை உரிமையாளருக்கு தலா ஒரு கார் பரிசு;

Update: 2026-01-17 16:34 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் அரசு அனுமதியுடன் பொதுமக்கள் சார்பில் 6 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 729 காளைகள், 269 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர் 5 சுற்றுகளாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 14 மாடுபிடி வீரர்கள், 14 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள் என மொத்தம் 55 பேர் காயமடைந்தனர். இதில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் சிறந்த மாடுபிடி வீரர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த கேடிஎம் கார்த்திக் 19 மாடுகளைப் பிடித்து தொடர்ந்து மூன்று வருடமாக முதலிடம் பிடித்த நபருக்கு கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி கார் பரிசாக வழங்கினார். அதேபோல திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மீனாட்சி நினைவு பெரிய கருப்பு என்ற காளை சிறந்த ஜல்லிக்கட்டு காளையாக தேர்வு செய்ய்ப்பட்டு அதன் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கினார்.

Similar News