அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டசிறப்பு முகாம் துவக்கம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்கப்பட்டது.;

Update: 2026-01-19 16:03 GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்டசிறப்பு முகாம் கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் துவக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்வாக என் பாரதத்திற்கான இளைஞர்கள் என்ற தலைப்பில் நடந்தது. இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு, நாட்டுப்பற்று மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. கணிதவியல் துறை கௌரவ விரிவுரையாளர் அருள் சின்னப்பன் வரவேற்றார். முதல்வர் (பொ) சரவணாதேவி பேசியபோது, நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கங்கள், மாணவர்களின் சமூக பங்களிப்பு, ஒழுக்கம், தலைமைத்துவ திறன் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு, முகாமின் வாயிலாக சமூக சேவையில் ஈடுபட்டு பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளிபாளையம் ஒன்றியம், வட்டாரக் கல்வி அலுவலர் அருள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து சமூக சேவையிலும் ஆர்வம் காட்ட வேண்டும், நாட்டு நலப்பணித் திட்டம் இளைஞர்களை சமூக மாற்றத்தின் முகவர்களாக உருவாக்கும் ஒரு சிறந்த தளமாகும், என்று பேசினார். வாசுகி நகர், தர்மத்தோப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியை நாகரத்தினம், தட்டாங்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

Similar News