அதிமுக ஆட்சி அமைந்ததும் தென்காசி கலெக்டர் அலுவலகம் திறக்கப்படும் மாவட்ட செயலாளர் பேச்சு
அதிமுக ஆட்சி அமைந்ததும் தென்காசி கலெக்டர் அலுவலகம் திறக்கப்படும்;
அதிமுக ஆட்சி அமைந்த உடன் தென்காசி கலெக்டர் அலுவலகம் திறக்கப்படும் அதிமுக மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் உறுதி வீரகேரளம்புதூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார், அப்போது அவர் பேசியதாவது மக்கள் நலத்திட்டங்களை புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்தனர் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கினர் அதனை எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தீவிரமான செயல் படுத்தினார் அந்த மக்கள் நலத் திட்டங்கள் திமுக அரசு நிறுத்தியும் பெயர் மாற்றம் செய்தும் வருகிறது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் திமுக நிறுத்திய அனைத்து திட்டங்களையும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று நிறைவேற்றி தருவார். அதே போன்று அதிமுக ஆட்சி அமைந்ததும் தென்காசி கலெக்டர் அலுவலகம் திறக்கப்படும் வீரகேரளம்புதூரில் அரசு மருத்துவமனை கட்டப்படும் என்று பேசினார் மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், இணைச் செயலாளர் முத்துலட்சுமி, துணைச் செயலாளர் வீரபாண்டியன் மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி (எ) சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டியராஜ், முன்னிலை கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் வரவேற்றார், தெற்கு ஒன்றிய செயலாளர் குணம் (எ) உத்திரகுணபாண்டியன், தொகுத்து வழங்கினார் தலைமை கழக பேச்சாளர் தியாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் எம்பி கேஆர்பி பிரபாகரன் கழக பேச்சாளர் பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் நிர்வாகிகள் முருகையா பாண்டியன், கார்த்திக் குமார், ஜனதா, சேப்பாராஜ், அகமது ஷா, கிருஷ்ணசாமி, ராமசாமி (எ) தமிழ் செல்வன், ராமையா, கந்தசாமி பாண்டியன், சங்கரபாண்டியன், இருளப்பன், பாண்டியன், அருவேல்ராஜ், முருகேசன், பாலகிருஷ்ணன், சுரண்டை சங்கர், தென்காசி சுடலை, கணேஷ் தாமோதரன், காத்தவராயன், ஜெயராமன், சுப்பிரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்