திம்மாச்சிபுரம் சாலையில் வைக்கும் போது பேங்க் ஆப்ரேட்டர் உயிரிழப்பு
லாலாபேட்டை போலீசார் விசாரணை;
கரூர் மாவட்டம், குளித்தலை தேசிய நெடுஞ்சாலை திம்மாச்சிபுரம் பேக்கரி அருகே கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த ஊராட்சியில் பணிபுரியும் குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர் தனபால் ( 50). என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் பணி முடிந்து இன்று இரவு தனது ஊருக்கு வந்தபோது எதிரே மூன்று நபர்களுடன் வந்த பைக் மோதியதில் பலத்த ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தார். இதில் பைக்கில் வந்த 3 நபர்கள் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றனர். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. லாலாபேட்டை போலீசார் விசாரணை.