தத்தகிரி முருகன் கோயிலில் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு மகா வேள்வி!

தத்தகிரி முருகன் செவ்வாய் அபிஷேக குழுவினர் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2026-01-20 16:21 GMT
சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. கோவிலில் இடும்பன், பஞ்சமுக விநாயகர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, சனிபகவான், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணு, சிவன், அவதூத சுவாமிகள் உள்ளது.தை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகமும் அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் கோவில் வளாகத்தில் ஸ்கந்த மகா வேள்வி மூலமந்திரத்துடன் நடைப்பெற்றது. பின்னர் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் காந்திபுரம் ,சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, முத்துகாப்பட்டி, துத்திகுளம், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல், பொட்டணம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தத்தகிரி முருகன் செவ்வாய் அபிஷேக குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News