ரவுடி என்கவுண்டர்

பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை கொலை செய்ய முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது என்கவுண்டர்;

Update: 2026-01-27 08:22 GMT
பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை கொலை செய்ய முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது என்கவுண்டர் பெரம்பலூர் அருகே ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அழகுராஜாவை இன்று அதிகாலை கைது செய்து போலீசார் அழைத்து வரும் போது போலீஸ் வாகனத்தில் வெடிகுண்டு வீசி, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற வரை மங்களமேடு காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் கொட்டுராஜா என்கிற அழகுராஜா இறந்தார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த ரவுடி வெள்ளைக்காளி என்பவரை கஞ்சா வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்து புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் கடந்த 24ம்தேதி வேனில் ரவுடி வெள்ளைக்காளியை சென்னை புழல் சிறையில் அடைக்க வழிக்காவலில் அழைத்து சென்றபோது பெரம்பலூர் அருகே மதியம் 2மணியளவில் ஓட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்தனர். அப்போது 12 பேர் கொண்ட மர்ம கும்பல் 6 நாட்டு வெடிகுண்டை வீசி ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிந்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிவந்தனர். தனிப்படை போலீசார் ஊட்டியில் தலைமறைவாக இருந்த மதுரை மேலஅனுப்பானடி சேர்ந்த சோலையப்பன் மகன் கொட்டுராஜா என்கிற அழகுராஜா (30 ) என்பவனை கைது செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் குற்றவாளி பயன்படுத்துவதற்காக மறைத்து வைத்த அரிவாள் மற்றும் நாட்டு வெடி குண்டை பறிமுதல் செய்ய திருமாந்துறை புனித ஆன்ட்ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காட்டு பகுதியில் அழைத்துசென்றனர். அப்போது குற்றவாளி அழகுராஜா அங்கு மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை போலீஸ் வாகனத்தின் மீது வீசி, குன்னம் காவல் நிலையம் உதவியாளர் சங்கரை இடது முழங்கை அருகில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற போது அழகுராஜாவை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். வெட்டுபட்டதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சங்கர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஐஜி : =========== தகவல் அறிந்த திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்று வரும் எஸ் ஐ சங்கரிடம் நலம் விசாரித்து மருத்துவரிடம் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார் . பின்னர் ஐஜி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ரவுடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மதுரையை சேர்ந்த கொட்டு ராஜா என்கிற அழகுராஜாவை தனிப்படை போலீசார் ஊட்டியில் கைது செய்து அழைத்து வந்தனர். குற்றவாளி திருமாந்துறை காட்டுப்பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாள்களை பதுக்கி இருந்ததை எடுத்து தருவதற்காக அழைத்து சென்ற போது ஒரு வெடிகுண்டை போலீஸ் வாகனத்தின் மீது வீசிவிட்டு தப்ப முயன்ற போது அவரை தடுத்த எஸ்ஏ சங்கரை அரிவாளல் வெட்டியுள்ளார். அப்பொழுது அங்கிருந்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தற்காப்புக்காக குற்றவாளி அழகுராஜாவை தலையில் சுட்டார். பின்னர் குற்றவாளி அழகுராஜாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இறந்து போன குற்றவாளி அழகுராஜா மீது மூன்று கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் 5 வழக்குள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவர் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். பேட்டியின் போது எஸ்பி அனிதா உடனிருந்தார்.

Similar News