கரூர்-வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்தினால் அபராதத்தை தவிர்க்கலாம். திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்தியா தகவல்.

கரூர்-வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்தினால் அபராதத்தை தவிர்க்கலாம். திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்தியா தகவல்.;

Update: 2026-02-09 13:16 GMT
கரூர்-வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்தினால் அபராதத்தை தவிர்க்கலாம். திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்தியா தகவல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் விடுதி கூட்ட அரங்கில் இந்திய அரசின் வருமான வரித்துறை திருச்சி மற்றும் கரூர் மாவட்டம் சார்பாக வருமான வரி செலுத்துவோர்க்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்தியா அவர்களும், வருமான வரித்துறை இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், வருமான வரி செலுத்துவோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரி செலுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வருமான வரித்துறையினர் எடுத்துரைத்தனர். மேலும் பல்வேறு தொழில் முனைவோர்கள், வரி செலுத்துபவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி அதற்கான பதிலை பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்தியா பேசும்போது, வருமான வரி செலுத்துவது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வரி செலுத்துவோர்க்கு வழங்கி வருகிறார்கள். ஆயினும் வரி செலுத்துவோரிடம் குறிப்பிட்ட சதவிகித அளவில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இதனால் அவர்கள் காலம் கடந்து வருமான வரி செலுத்தும்போது அதற்கான அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக வருமான வரி செலுத்துவோர்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்களது வருமான வரி செலுத்துவது தொடர்பான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்து, கால நேர விரயத்தையும், அதிகப்படியாக அபராதம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என வருமான வரி செலுத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தார்.

Similar News