அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய BS VI புறநகர் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய BS VI புறநகர் பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ் எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
அரியலூர், ஆக. 6- அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் கிளாம்பாக்கம், சிதம்பரம், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 07 புதிய BS VI புறநகர் பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (06.08.2025) புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் செந்துறை ஊராட்சியில், செந்துறை- கிளாம்பாக்கத்திற்கு 03 புதிய BS VI புறநகர் பேருந்து சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் புதன்கிழமை 6.08.25 இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். செந்துறை ஊராட்சியில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதன் அடிப்படையில் தொடர்ந்து பழைய பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு புதிய பேருந்துகள் அந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னைக்கு இயக்கப்படுகின்ற 3 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜெயங்கொண்டத்தில் 4 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்குவதன் அடிப்படையில் ஏறத்தாழ 5000 பேருந்துகளை நெருங்குகின்ற அளவிற்கு புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வருகின்ற பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வளர்ச்சி விகிதம் ஏற்கனவே 9.69 விகிதம் என்ற அளவில் ஒன்றிய அரசின் அறிக்கையில் வெளியிடப்பட்டது. தற்பேர்து ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட அறிக்கையில் 11.19 விகிதம் என்ற அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் இருக்கின்ற வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டு வெளிப்படுத்துகின்ற இந்த அறிக்கையாகும். அதில் மிக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் 6.5 சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கின்ற சூழலில் தமிழ்நாடு இரட்டிப்பு அளவிற்கு 11.19 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும், இரட்டை இலக்கத்தை தமிழ்நாடு கடந்த காலங்களில் எப்போது எட்டியது என்றால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2010-2011 ஆண்டில் இதேபோன்று ஒன்றிய அரசின் அறிக்கையில் இரட்டை இலக்கம் அடைந்தது வெளிப்படுத்தப்பட்டது. இன்றைக்கு மீண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் திராவிட மாடல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியில் இரட்டை இலக்க அளவில் தற்போது தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் வெளிப்பாடாகதான் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் என்கிற மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்கள். பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் துவங்கியிருப்பதற்கு இந்த வியாட்னாம் மின்வாகன உற்பத்தி நிறுவனம் சாட்சியாக அமைந்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய தொழில் திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். எனவே 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு இவை அனைத்தும் சாட்சியாக அமைந்துள்ளது என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் கிளாம்பாக்கம், சிதம்பரம், மதுரை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 04 புதிய BS VI புறநகர் பேருந்து சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், வியாபாரிகள், பணிநிமித்தமாக வெளியூர் செல்வோர் பேருந்து வசதியை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், நிர்வாக இயக்குநர் க.தசரதன், பொது மேலாளர் டி.சதீஸ்குமார், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்ற துணைத்தலைவர் கருணாநிதி, துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எம்.எஸ்.புகழேந்திராஜ், கோட்ட மேலாளர் (பெரம்பலூர்) ஆர்.ராம்குமார், கிளை மேலாளர் (அரியலூர்) குணசேகர், தொழிற்சங்க பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.