கே. எஸ். ஆர். பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 09 வது பட்டமளிப்பு விழா

கே. எஸ். ஆர். பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 09 வது பட்டமளிப்பு விழா;

Update: 2025-02-15 09:47 GMT
திருச்செங்கோடு கே எஸ் ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 09 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள் பட்டம் வாங்கும் மாணவ மாணவியரை வாழ்த்தினார். மற்றும் துணை தலைவர்.திரு. சச்சின் சீனிவாசன் அவர்கள் பட்டமளிப்பு விழாவினை தலைமை தாங்கி பட்டம் வாங்கிய மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். விழாவில் மைக்ரோசாப்ட் பெங்களூரு கிளையின் வடிவமைப்பு துறையின் பொறியாளர் திரு.சாய்க் அலீம் உர் ரகுமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் இத்துடன் கற்றலை நிறுத்தி விடாமல் தொடர்ந்து புதுப்புது தொழில் நுட்பங்களான ஏ.ஐ. போன்றவற்றை கற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதில் மொத்தம் 222 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் அவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அனைவரும் அதனை பின்மொழிந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர்.மோகன் அவர்கள், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெயபாரத், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Similar News