டிசம்பர் 1ஆம் தேதி மாணவர்களுக்கான கருத்தரங்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்

டிசம்பர் 1ஆம் தேதி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-28 16:08 GMT

மாவட்ட ஆட்சியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென

தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் / நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 100 பள்ளிகள்

மற்றும் 100 கல்லூரிகளில் "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென குழு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும் பேரவைத் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்ற பேரவைச் செயலக உயர் அலுவலர்களுடன், சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியில், மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வருகின்ற 01-12-2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் சிவகங்கை, ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியிலும், நண்பகல் 12-00 மணியளவில், மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் மாலை 3-30 மணியளவில் ராகினிப்பட்டி, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியிலும் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News