கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க ஒரு லட்சம் லட்டு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை இன்று இந்து அறநிலையத்துறை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்:- குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி ஆலயத்தில் விற்றிருக்கும் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு படைக்கவும், பக்தர்களுக்கு வழங்கவும் என மூன்று வகையான லட்டுகள் இரவு பகலாக 100 பணியாளர்களை கொண்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இதற்காக 4 டன் சீனி, 2டன் கடலை மாவு,100 கிலோ நெய்,100 கிலோ முந்திரி பருப்பு, 25 கிலோ ஏலக்காய், 25 கிலோ கிராம்பு பொருட்கள் கொண்டு லட்டு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. என அறங்காவலர் குழு தலைவர் கூறினார்.