மார்ச் 1ம் தேதி திருச்சி அளுந்தூரில் ஜல்லிக்கட்டு
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் முகூர்த்தக்கால் ஊன்றி விழா தொடக்கம்;
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தில் தானாகவே முளைத்த முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு விழா எது விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக முகத்த கால் நடும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தானாகவே முளைத்த முத்து மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட முகூர்த்த காலை ஊன்றி முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர்களோடு இணைந்து ஊன்றினார். மேலும் பூஜை செய்யப்பட்ட பாரம்பரமிக்க ஜல்லிக்கட்டு பிடி அருவாளையும் எடுத்து விழா குழுவினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம பட்டையதாரர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்