திருச்சி அருகே 1½ டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-03-14 03:38 GMT
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தனிப்படை போலீசார் அரிசி மற்றும் உணவு பொருட் கள் கடத்தல் சம்பந்தமாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், வாழவந் தான்கோட்டை, எழில் நகர், வேங்கூர், கூத்தைப்பார் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவெறும்பூர் வேங்கூர் சாலையில் கூத்தைப்பார் பொன் அரசு காத்த அம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ(1½ டன்) பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேனில் இருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவரது பெயர் முருகானந்தம் (வயது 23), அந்தநல்லூர் அருகே உள்ள திண்டுக்கரை கீழத்தெருவை சேர்ந்தவர் என்பதும், இவர் வேங்கூர், கூத்தைப்பார் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு பெல் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடநாட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக் கும், இரவு நேர டிபன் கடைகளுக்கும் விற்க கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முருகானந்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Similar News