கோவை: குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி - ஆட்சியர் தகவல் !
குரூப்-1 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவையில் தொடங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தகவல்.;

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்றும், இந்தத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவையில் தொடங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும். இப்பயிற்சியில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.