மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா 1-ந் தேதி தொடங்குகிறது
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் 9-ந் தேதி நடைபெறுகிறது;
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி தொடங்குகிறது. இதை யொட்டி 30-ந் நேதி உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 1-ந் தேதி காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. 5-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் ரத்தினவதிக்கு ஈசன் தாயாக வந்து மருத்து வம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று மாலை அறுபத்து மூவருடன் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 8-ந்தேதி சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் எழுந்தருள வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் 9-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 10-ந் தேதி காலை நடராஜர் தரிசனமும், தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. 12-ந் தேதி தாயுமான அடிகள் உற்சவத்தையொட்டி மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணா மூர்த்தி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம் பாள் யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந் தேதி இரவு பிச்சாடனார் திருவீதி உலா, 14-ந் தேதி இரவு சண்டிகேசுவரர் திருவீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர் வாகம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்