கடலூர்: 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.;
அரபிக்கடலில் தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் இன்று (மே 24) 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அந்த வகையில் கடலூர் துறைமுகத்தில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவானதை அடுத்து புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.