ஆகஸ்ட் 1ல் ஆடி பெருந்திருவிழா தொடக்கம்.
மதுரை அழகர் கோவிலில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆடி பெருந்திருவிழா தொடங்குகிறது.;
மதுரை அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா அடுத்த ஆகஸ்ட் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்குகிறது. திருவிழா நடைபெறும் பத்து நாட்களிலும் இரவு சுவாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் திருவிழா ஆகஸ்ட் 9ந் தேதி சனிக்கிழமை காலை ஆடி பௌர்ணமி அன்று கள்ளழகர் திருத்தேர் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது அன்று மாலை பத்தினெட்டம் பாடி கருப்பசாமி சந்நிதி கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை மற்றும் தீபாராதனை மற்றும் சந்தானம் சாத்துதல் நடைபெறுகிறது இரவு புஷ்ப பல்லக்கில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருள்கிறார்.