ரூ 1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌

ரூ 1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌;

Update: 2025-07-31 15:39 GMT
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் தங்களுக்கு மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்த அமைச்சர்; மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவிகள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று சுமார் ரூ 1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்தார். அதன் பந்தல்குடி, வேலாயுதபுரம், கொப்புசித்தம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டிடம் கட்டுவதற்கும், கலையரங்க கட்டிடங்கள் கட்டுவதற்கும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்‌. மேலும் பந்தல்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கலையரங்க கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனிடம் அந்த பள்ளியில் படிக்கும் கொப்புசித்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் தங்களுக்கு 4 மணிக்கு பள்ளி முடிவடைவதாகவும், அந்த நேரத்தில் வரும் பேருந்தில் ஏறி ஊருக்கு செல்ல முடியவில்லை எனவும் அதை விட்டால், 6.30 மணிக்கு தான் தங்கள் ஊருக்கு செல்ல பேருந்து உள்ளது எனவும் இதனால் 7:00 மணிக்கு மேல் தான் ஊருக்கு செல்ல முடிகிறது என்றும் தாமதமாக இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று படிக்க முடியவில்லை எனவும் தங்களுக்கு மாலை 5 மணிக்கு கொப்புசித்தம்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கையை பொறுமையாக கேட்ட அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மாலை 5 மணிக்கு பள்ளி மாணவிகளுக்காக பேருந்து வசதி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், பள்ளி நான்கு மணிக்கு முடிவடைவதாகவும், பள்ளி முடிந்து மாலை 6.30 மணிக்கு வரும் பேருந்தில் ஏறி இரவு தான் வீடு போய் சேர வேண்டி உள்ளது எனவும், இதனால் தங்களால் படிக்க முடியவில்லை எனவும், எங்களுக்கு மாலை 5 மணிக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனவும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தோம். உடனடியாக செய்து தருவதாக எங்களுக்கு அவர் உறுதி அளித்தார். அவருக்கு எங்கள் நன்றி என கூறினர்.

Similar News