கரூர் பேருந்து நிலையத்தில் ரூ.10- லட்சம் களவாடப்பட்டது போல் நாடகமாடிய நான்கு பேர் கைது.

கரூர் பேருந்து நிலையத்தில் ரூ.10- லட்சம் களவாடப்பட்டது போல் நாடகமாடிய நான்கு பேர் கைது.

Update: 2024-09-14 16:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் பேருந்து நிலையத்தில் ரூ.10- லட்சம் களவாடப்பட்டது போல் நாடகமாடிய நான்கு பேர் கைது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 46. இவர் கரூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கிளை நிறுவனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 25 என்பவர் பத்மநாபன் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 11ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து நிதி நிறுவனத்தின் பணம் 10 லட்சத்துடன் மோகன் கரூருக்கு பேருந்தில் வந்தார். கரூர் வந்த பிறகு பேருந்து நிலையத்தில் தனது டூவீலரில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் ரூ 10 லட்சம் பணத்தை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவரது டூவீலரில் இருந்த 10- லட்சம் திருடு போனதாக மோகன் பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்மநாபன் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பேருந்து நிலையத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு, பிறகு அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மோகனின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.10- லட்சத்தை 3-பேர் களவாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் கரூர் பெரியாண்டாங்கோவிலை சேர்ந்த சூரிய நாராயணன் வயது 24, லாலாபேட்டையை சேர்ந்த கார்த்தி வயது 24, பண்டுதகாரன் புதூரைச் சேர்ந்த புகழேந்தி வயது 23 என்பதும், திருட்டு சம்பவத்தில் மோகனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மோகன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்தனர் கரூர் மாநகர காவல்துறையினர்.

Similar News