மேட்டுக் கொல்லை ஏரிப் பாசனக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு!! தனிநபர் அட்டூழியம்!!

Update: 2024-09-18 11:33 GMT

மேட்டுக் கொல்லை ஏரிப் பாசனக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு!!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மேட்டுக் கொல்லை ஏரிப் பாசனக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு!! தனிநபர் அட்டூழியம்!!

நடவடிக்கை எடுக்க தயங்கும்- வருவாய்த்துறை அதிகாரிகள்- அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரிலிருந்துசுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள,நாஞ்சீபுரம் கிராமத்தில் உள்ளஏரி நீர் பாசனத்தை பயன்படுத்தி

காட்டுக்கொள்ளை- மேட்டுக்கொள்ளை- நாஞ்சீபுரம், உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆயிரம்- ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் ஆண்டிற்கு இரண்டு போகம்- நீர்ப்பாசன வசதி பெறுகின்றன!

களம் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஏரிப் பாசனக் கால்வாய்களை அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்- என்கிற தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது!!

ஏரிப் பாசன கால்வாய்களில் ஆக்கிரமிப்பின் காரணமாக அப்பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது!!

பாசனக் கால்வாய் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியின்றி ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளால்,

பாசனப் பயிர்களுக்கு நீர் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. தனால், ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தடுப்புகளை அகற்ற வேண்டி அப்பகுதி விவசாயிகள் உத்தரமேரூர் வட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட உத்தரமேரூர் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரிப் பாசன கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகுமாறு கூறியுள்ளார்!! பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்சினை சம்மந்தமாக புகார் அளிக்க சென்ற விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள்உத்தரமேரூர் வருவாய்த் துறையினரிடம் புகார் அளிக்குமாறு விவசாயிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர்!! இதனால் செய்வதறியாது அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளிக்க சென்றுள்ளனர்!!


மக்களுடன் முதல்வர் முகாமில், உத்தரமேரூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் சுந்தர்,எம்,எல்,ஏ - விடம் புகாரளித்துள்ளனர். ஏரிப் பாசன கால்வாயை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் துறை சார்ந்த அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறியுள்ளனர்!!

அதற்கு சட்டமன்ற உறுப்பினர் - சுந்தர்

மேட்டுக்கொள்ளை விவசாயிகள் பிரச்சினைக்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை கடிதம் எழுதி விவசாயிகளிடம் கொடுத்துள்ளார்!!

ஆக்கிரமிப்பு புகார் உள்ளிட்ட எம்எல்ஏ பரிந்துரை கடிதத்துடன் உத்தரமேரூர் வட்டாட்சியரிடம் நினைவூட்டல் கடிதம் வழங்கியுள்ளனர்!! கடந்த மூன்று மாதங்களாக பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்த எவ்வித நடவடிக்கைகளையோ?? ஆய்வுப் பணிகளையோ??

மேற்கொள்ளாமல் வருவாய்த் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக

அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்!!

இதுகுறித்து நாஞ்சீபுரம்- ஏரி தண்ணீரைப் பயன்படுத்துவோர் கூறியது:

உத்தரமேரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அரசியல் பின்புலம் கொண்ட செல்வாக்கு மிக்க நில புரோக்கர்கள்- வருவாய்த் துறையினரை கையில் போட்டுக்கொண்டு இதுபோல மேய்க்கால் புறம்போக்கு நிலம், களம் புறம்போக்கு நிலங்கள், உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து வருகின்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்க சென்றால் அவர்களை மிரட்டுவதும் ,தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக அரசுத்துறை அதிகாரிகள் செயல்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்!! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து நேரில் கள ஆய்வு செய்து இப் பிரச்சனைக்கு தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்!!

Similar News