செவாலியர் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
திண்டுக்கல்லில் செவாலியர் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் பள்ளியில் மாணவ ,மாணவிகளிடம் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை விதித்தார். பள்ளி முதல்வர் ரோஸ்லின் முன்னிலை வகித்தார். சைபர் கிரைம் எஸ்.ஐ. ஈஸ்வரி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ. மகாலட்சுமி, ஏட்டு லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் சைபர் கிரைம் எஸ்.ஐ.ஈஸ்வரி பேசியதாவது: ஆன்லைனில் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. அப்பாவி கிராம மக்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் மொபைல் போனில் அதிகரித்துள்ளது. மாணவர்கள் உங்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என பொய் பிரச்சாரம் செய்து ஆன்லைன் மூலம் ,போன் மூலம் பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களிடம் ஆண் குரலிலும் ,ஆண்களிடம் பெண் குரலிலும் பேசி மோசடி செய்வார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஏடிஎம் நம்பரை கேட்பார்கள். கொடுக்கக் கூடாது. உங்கள் பெற்றோர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனைத்தையும் திருடி விடுவார்கள். ஆகவே மாணவர்கள் உங்கள் கிராமங்களில் உள்ள அப்பாவி மக்களிடம் உங்க உறவினர்களிடம் உங்க பெற்றோரிடம் விழிப்புணர்வு செய்யுங்கள். 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இந்த மையத்தில் ஆன்லைன் மோசடி புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.