கரூர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்புகளுக்கு இன்று நடைபெற்ற நேர்காணலில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்புகளுக்கு இன்று நடைபெற்ற நேர்காணலில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்புகளுக்கு இன்று நடைபெற்ற நேர்காணலில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்தும் விதமாகவும் ,கட்சி அமைப்பை பலப்படுத்தும் விதமாகவும், இளைஞர்களுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பு வழங்குவதற்காகவும் திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆய்வுக் கூட்டத்தில், கட்சியின் இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கரூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் இன்று கரூர் மாவட்டக் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சரவண மூர்த்தி, தலைமையில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, கழக மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசுகையில்... இந்திய அரசியல் வரலாற்றில் நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் திராவிட முன்னேற்ற கழகம், சமூக மாற்றத்தை விதைத்த ஒரே கட்சி என்றார். மொழிப்பற்றை, இனப்பற்றை தூக்கி சுமந்து பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கையால், இன்று தகவல் தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் சர்வதேச நாடுகளை நோக்கி செல்கின்றனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை அடிப்படையில் இன பற்றையும், மொழியால், தமிழால் ஒரே தத்துவமாக இந்த சமூகத்தில் திமுக என்ற இயக்கம் இணைத்து வைத்துள்ளது. இந்த இயக்கத்தில் இணைய உள்ள புதிய உறுப்பினர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றார் நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் கனகராஜ், மாவட்ட கழக துணை செயலாளர்கள் எம்.எஸ்.கருணாநிதி, மகேஸ்வரி , மாவட்ட கழக பொருளாளர் பரத், தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், பகுதி கழக செயலாளர்கள் தாரணி சரவணன், சுப்பிரமணி, ராஜா, குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.