நாட்றம்பள்ளி அருகே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
நாட்றம்பள்ளி அருகே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.;
நாட்றம்பள்ளி அருகே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. இருவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்த்தபினர் போலீசார் விசாரணை. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டிவிங்கிளி (வயது 35) மற்றும் விபின்ஜாஸ் (வயது 43) ஆகிய இருவரும் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் இருவரும் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த கார் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே ஒண்டிகுட்டை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் விவசாயம் நிலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காரில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிஷ்டவசமாக காரில் பயணித்த இருவர் காயங்களுடன் உயிர்த்தபினர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.