கஞ்சா கடத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை,ரூ.1 லட்சம் அபராதம்;

Update: 2025-05-29 13:27 GMT
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே கடந்த 2013-ம் ஆண்டு கஞ்சா கடத்திய வழக்கில் மதுரையை சேர்ந்த சங்கிலித்தேவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மன மயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீதிபதி அவர்கள், சங்கிலிதேவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News